மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கரடியனாறு கொடுவாமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தி.யகேந்திரன்
தலைமையில் நேற்று(சனிக்கிழமை) கொடுவாமடு கிராம அபிவிருத்திசி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் கடற்புலி கெப்டன் ரூபனின் தாயார் முதல்சுடர் ஏற்றிவைத்ததையடுத்து மாவீரர்களுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டு மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை, வவுணதீவு அமைப்பாளர் வினோதன், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


#Tamilnews  #Tamil  #Batticola #TNPF  #Tamilarul.net

No comments

Powered by Blogger.