கனடா உறங்கா விழிகள் உதவியுடன் உலர் உணவுப் பொதிகள் வழங்கல் நிகழ்வு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களிற்கு 4000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ் கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை