முதல் முறையாக ரசிகர்களை குஷி படுத்திய விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்... பல்வேறு இன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.


நடிப்பது... சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது. ரசிகர்களுக்கு உதவுவது. அவர்களுடன் சலித்து கொள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.
தொடர்ந்து பல வருடங்களாக நாய்டுது கொண்டிருக்கும் இவர்.. எப்போதுமே தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை மட்டும் வெளியில் விட்டதே இல்லை. சமீபத்தில் இவர் தன்னுடைய மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மட்டும் வெளியானது.
முதல் முறையாக தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.திருமணநாளையொட்டி குடும்பத்துடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படங்களும் வைரலாக பரவுகிறது.

No comments

Powered by Blogger.