நாடாளுமன்ற சம்பிரதாயத்தினைக் காப்பாற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஜனநாயக ஒழுங்கில் செயற்பட வலியுறுத்தி பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வேண்டுகோள்!"

சமூக நீதியினை வலியுறுத்தும் பெண்கள் குழுக்களுக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து இணைந்து எதேச்சாதிகார சக்திகளுக்கும்,
செயன்முறைகளுக்கும் எதிரான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம்.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்பு கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தைச் சண்டைக் களமாக மாற்றிச் சபாநாயகரைப் பேச அனுமதியாதபடி ஏதேச்சாதிகாரத்தோடு செயற்பட்டதனை ஜனநாயத்திற்கு எதிரான செயற்பாடு என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றோம். ஜனநாயகபூர்வமான செயற்பாடுகள் எப்போதும் முன்நிறுத்தப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். குறைவான தீய சக்திக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் அரசியல் உபாயத்தினைவிட நாட்டின் மக்கள் என்ற வகையில் அனைத்து தரப்புகளையும் ஒன்றுதிரட்டி எமது கூட்டு எதிர்ப்புகளுக்கான நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவோம்.

ஜனநாயகபூர்வமான செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கும்படியும், பொறுப்புணர்வுடன் செயற்படும்படியும் அதிகாரத்தில் இருக்கும் அனைவரையும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம். ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான எமது முழுமையான ஆதரவினையும் நாம் வெளிப்படுத்தும் அதேவேளை சமூக நீதியினை வலியுறுத்தும் பெண்கள் குழுக்களுக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து இணைந்து எதேச்சாதிகார சக்திகளுக்கும், செயன்முறைகளுக்கும் எதிரான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம்.

கையெழுத்திட்டுள்ள பெண்கள் குழுக்களும் சிவில் அமைப்புக்களும்
1) சுமூக அபிவிருத்தி நிலையம் - கண்டி
2) மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் பெண்கள் அபிருத்திக்கான செயற்பாட்டு வலையமைப்பு
3) நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையம் - திருகோணமலை
4) மன்னார் பெண்கள் அபிவிருத்தி மையம்
5) Women’s Front for Transitional Justice
6) மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு – கிளிநொச்சி
7) முல்லைத்தீவு சங்கம் பெண்கள் ஒன்றியம்
8) முல்லைத்தீவு நிசா அபிவிருத்தி நிலையம்
9) கிராமிய அபிவிருத்தி அமைப்பு – வவுனியா
10) வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் - யாழ்ப்பாணம்
11) முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் - புத்தளம்
12) Child Vision Srilanka – Puttalam
13) வடக்கு முஸ்லிம் போரம் (NMF) புத்தளம்
14) Voice Area Federation
15) மாற்றம் மனிதாபிமான நிறுவனம் - புத்தளம்
16) மாற்றுத்திறனாளி சிறார்களின் பெற்றோர் அமைப்பு –புத்தளம்
17) மாவட்ட மத நல்லிணக்க கமிட்டி – பாலாவி
18) Voice Area Federation – பாலாவி
19) சுந்திர அபிவிருத்திகான பெண்கள் செயலகம் - WOMANAID – மட்டக்களப்பு
20) கிழக்கு சமூக அபிவிருத்திக்கு அமைப்பு – நுளுனுகு
21) ஆனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் ஒன்றியம்
22) புணிபுரியும் பெண்கள் அபிவிருத்தி போரம்
23) பெண்கள் வள நிலையம்
24) திருப்பெருந்துறை சமூக அபிவிருத்தி நிலையம்
25) மட்டக்களப்பு இடம்பெயர் வலையமைப்பு
26) மக்கள் நலன்புரி வலையமைப்பு
27) கிராமிய மக்கள் அபிவிருத்தி அமைப்பு
28) களம் - அம்பாறை
29) மறுமலர்ச்சி – அம்பாறை
30) மகாசக்தி
31) கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு
32) பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பு
33) பெண்கள் அபிவிருத்தி நிலையம் - அம்பாறை
34) பெண்கள் அபிவிருத்தி அமைப்பு – அம்பாறை
35) சமூக நலன்புரி அமைப்பு – அம்பாறை
36) மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் - அம்பாறை
37) மனித மேம்பாட்டு நிறுவனம் - அட்டாளைச் சேனை
38) பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கான அமைப்பு – மன்னார்
39) சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் -மட்டக்களப்பு
40) இணையம் மட்டக்களப்பு
41) மந்த்ரா லைஃப்
42) சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் - மட்டக்களப்பு

Oodaru

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.