இலங்கை சர்வதேச சலுகைகளை இழக்கும் அபாயத்தில் !

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக சர்வதேச சலுகைகளை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அனைத்து பயணங்களையும் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவை வெளிநாட்டு ராஜதந்திர பிரதிநிதிகள் குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது அரசியலமைப்புக்கு அமைய உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

ஐக்கிய நாடுகளின் சட்ட பிரதிநிதி - ஹன்னா சிங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் - மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெகின்னன் மற்றும் ஜேர்மன் தூதுவர் ஜோன் ரோத்ட் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ராஜதந்திரிகள் குழு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நெருக்கடி காரணமாக இலங்கை முகம் கொடுக்கக் கூடிய எதிர்மறையான விளைவுகள் தொடர்பில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்த அரசியல் சூழ்நிலையை அடுத்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஐரோப்பிய பிரதிநிதிகள் அவதானத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நிலைமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளினால் இலங்கையில் மேற்கொள்ளவிருந்த அனைத்து இராஜதந்திர விஜயங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை பிற்போட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Money #Economy

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.