வவுனியாவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை மட்டுமல்ல வவுனியாவையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.


வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா இலங்கை வங்கியின் ஊழியர் ஒருவரும் முச்சக்கர வண்டியின் உரிமையாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இவ் விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இலங்கை வங்கியின் காவலாளியாக பணியாற்றிய விஜிதரன் (29)என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இதேவேளை, மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களின் உதவியுடன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
#Vavuniya #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.