பிரபாகரனுடன் ஒப்பிட முயற்சிக்கும் ரணில்- பொதுபலசேனா!

ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்றவர். அவர் பிரபாகரனுக்குச் சமமானவர். ஆகையினாலேயே தற்போதுள்ள நிலையில் உள்நாட்டு தரப்புக்கள் மற்றும் ஊடகங்களை விடவும் பிரபாகரனுக்கு ஆதரவளித்தது போல் சர்வதேச சமூகம், சர்வதேச ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.


நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிடுகையில்,

நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் மூன்று ஆண்டுகள் பொறுத்திருந்த ஜனாதிபதி தற்போது பிரதமரை மாற்றும் முடிவினை எடுத்துள்ளார்.

நாங்களும் ஜனாதிபதியை பலமுறை அவதூறாகப் பேசியிருக்கின்றோம். ஆனால் இவ்வாறானதொரு சிறந்த முடிவினை மேற்கொள்ளத்தக்க ஆத்ம தைரியம் அவரிடம் உண்டு என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

கடந்த காலத்தில் நாட்டை சிறப்பாக நிர்வகித்த மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதுள்ள நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என பொதுபலசேனா அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. 

No comments

Powered by Blogger.