செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்

மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக

வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் சிவக்குமார் கூறியிருப்பதாவது,

`ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார், செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'. என்று பேசினார். 

No comments

Powered by Blogger.