கறுப்பாடுகள்..!


மீண்டும்
தமிழன் இரத்தம் குடித்த
காட்டேறியின் கால் நக்கிய
சில வீட்டு முதலாளிகள்!

எம் குலப்பெண்களை
அம்மணமாக்கி
அங்கமங்கமாக
சுவைத்து
கொங்கைகளை
அறுத்துப்போட்டு
பந்தாடிய
பாதகரின் பாதங்களை
தொட்டுத் தழுவி
கூத்தாடும்
கூட்டமைப்பு
கோடாரிக்காம்புகளின்
கோடான கோடி
பேரம் பேசலில்
மண்டியிட்டு கிடக்கிறது
மானத்தமிழனின்
சுயமரியாதையும்
இனவழிப்பின்
நீதியும்!

சிகப்பு துண்டுக்காரனின்
சீதனக்களிப்பில்
தள்ளாடும் மாப்பிள்ளையின்
விருந்துண்ணலும்
கள்ளக் காதலியோடு
மறைந்து மறைந்து
காதல்மொழி பேசுவதும்
வெளியே வந்து
கள்ளடித்த போதையில்
கதைவிடுவதும்
தீராத நோயாய்
தமிழனை பிடித்து
உலுப்பி
எடுக்கிறது.

கள்ளநோட்டு குவியலை
வெள்ளை வேட்டிக்குள்
சுருட்டிக் கட்டிய
மொள்ளமாரிகள்
தமிழர்களின் உரிமைகளை
மொட்டையடித்துவிட்டு
மெத்தப்படித்த கதையில்
சுத்துமாத்து அரசியலை
நடத்தியவாறு
எல்லாவற்றையும் விற்றுப்
பிழைக்க
துணிந்து விட்டது.

இனியும்
தந்திரோபாய அரசியலென
தம்பட்டமடித்தபடி
தமிழரின் தலையில்
மிளகாய் அரைக்க
சுளைசுளையாய்
பொய்களை திரட்டியபடி
அடுத்த அரசியல் நகர்வுக்கு
பக்கத்து வீட்டு ஏவிகளின்
காலைப்பிடித்தவாறு
எங்கள் தோளைத்தட்ட
வருவார்கள்!

கவனம்!

நீ
தன்மானத் தமிழனாக இருந்தால்
இனியாவது முடிவுசெய்
அடுத்த அரசியல் நகர்வில்
இருந்த இடமே இல்லாமல்
போகவைப்போம்.
புலித்தோல் போர்த்திய நரிகளின் வால்களை
ஒட்ட நறுக்கி
ஓடவைப்போம்.

தூயவன்

No comments

Powered by Blogger.