மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் பாரிய மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
´ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்´ எனும் தொனிப்பொருளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நுகேகொட பகுதியில் இந்த மக்கள் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய பிரதமர் பதவிக்கான நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வலியுறுத்தியும் இம்மக்கள் கூட்டம் இடம்பெற்று வருகிறது.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை