சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த தயார்!- அமெரிக்கா!
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, அனைவருக்கும் மனித உரிமைகள் உறுதிபடுத்தப்பட்ட எதிர்காலமொன்றை ஏற்படுத்த ஒன்றுபட்டு உதவ தயாராகவிருப்பதாக, இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட அலைனா இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையில் ஒரு அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் இந்நாட்டுக்காக பணியாற்றுவது தொடர்பில் நான் பெருமையடைகிறேன்.
இலங்கையின் சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கான பயணத்தில் அமெரிக்கா கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் பாதுகாப்பானதும் வெற்றிகரமானதுமான இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை உறுப்படுத்துவதற்கு எம் முன்னால் இருக்கும் வாய்ப்புகளை இறுக பற்றிக் கொள்வதற்கும் ஒன்றுபட்டு பணியாற்றும் இந்த பயணத்தில் நானும் உங்களுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை