வெள்ள நீரில் மூழ்கியது புத்தளம்!

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருகின்ற நிலையில், புத்தளம் பகுதியில் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வெள்ள பாதிப்பினால் மதுரங்குளி-ஸ்ரீமேவாபுரம் கிராமத்தை சேர்ந்த 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் பட்சத்தில் முழு கிராமமும் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும், இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.