நித்திய புன்னகை அழகன்..!


நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்கவும்
ஏதும் பேசாமலே தூங்குகின்றான்…

தம்பியே தமிழ்ச்செல்வனே…
எங்கள் தானைத் தலைவனின்
பிள்ளையே……

உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே…
உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே…

நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகின்றான்…
நாங்கள் தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்கவும்
ஏதும் பேசாமலே தூங்குகின்றான்…

பூவிரிதல் போல உந்தன்
புன்னகை போனதா?
பேசவந்த பாவியரால்
பாசமரம் சாய்ந்ததுவா…

சாவிரித்த பாயினிலே
நீ உறக்கம் கொள்ளுகிறாய்…
தலைவனுக்கு என்ன பதில்
சொல்லிவிட்டு செல்லுகிறாய்?

தம்பியே தமிழ்ச்செல்வனே
தமிழ் ஈழத்தை
நெஞ்சிலே தாங்கினாய்…
அண்ணனின் உயிர் பிள்ளையே
பகை வீசிய குண்டினால் தூங்கினாய்

நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகின்றான்
நாங்கள் தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்கவும்
ஏதும் பேசாமலே தூங்குகின்றான்…

நீ நடந்த தேசமெல்லாம்
தீ எரிந்து சாய்கிறதே..
பேசவென நீ அமர்ந்த
ஆசனங்கள் வேகிறதே…

பாவியர்கள் காலை வந்து
சாவிரித்து கொண்டனரே..
நாளை இதற்கான பதில்
நம் தலைவர் சொல்லுவரே

தம்பியே தமிழ்ச்செல்வனே
நீ சாகவில்லை
எம்மை ஆளுகின்றாய்..
அண்ணனின் அருகாகவே
நீ என்றுமே உயிர் வாழுவாய்..

நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகின்றான்
நாங்கள் தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்கவும்
ஏதும் பேசாமலே தூங்குகின்றான்…

தம்பியே தமிழ்ச்செல்வனே…
எங்கள் தானைத் தலைவனின்
பிள்ளையே……
உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே…
உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே…

நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகின்றான்
நாங்கள் தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்கவும்
ஏதும் பேசாமலே தூங்குகின்றான்…

உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா
எங்கள் செல்வமே…
அண்ணனின் உயிர் பிள்ளையே
பகை வீசிய குண்டினால்
தூங்கினாய்….

அண்ணனின் அருகாகவே
நீ என்றுமே உயிர் வாழுவாய்..

உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா
எங்கள் செல்வமே…

நித்திய புன்னகை அழகன்
இங்கு நீழ்துயில் கொள்ளுகின்றான்

No comments

Powered by Blogger.