சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள்2018 எழுச்சி ஆரம்பம்

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று காலை 10.00மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு 2018ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளின் முதலாம் நாள் நிகழ்வுகள் சம்பிரதாயமாக ஆரம்பிக்கப்பட்டது .


இதில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களின் கல்லறைகளிலும் மாவீரர்களின் சிதைவடைந்த நினைவிட சிதறல்களிலும் (நினைவிடத்திலும் ) மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பலரின் மனங்களை நெகிழவைத்தது.

No comments

Powered by Blogger.