மாவீரர்களின் தியாகங்கள் ஒருபோதும் வீண்போகாது-செ.கஜேந்திரன்!

கனேடியத்தமிழ்த்தேசிய அவையின் "மண்வாசனை" அமைப்பின் நிதி உதவியின் மூலம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போரில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் ஒரு தொகுதி பேருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு 19.11.18 அன்று மாங்குளத்தில் நடைபெற்றுள்ளது


இந்த நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளதுடன். மாவீரர்கள் பெற்றோர்கள் மத்தியில் உரைநிகழ்த்தியுள்ளார்.

அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியினை இணைக்கின்றோம்

றாஜபக்சவிற்கு மைதிரி பதவிகொடுத்தது சட்டவிரோமம் ஜனநாயக விரோதம் அதில் மாற்றுக்கருத்து இல்லை பாரளுமன்றம் கலைத்தததும் தவறு நீங்கள் வழக்குபோட்டதும் சரி அந்த வழக்கின் பிற்பாடு சம்மந்தன் சொல்கின்றார் இலங்கiயின் நீதித்துறை சுயாதீனமாக இருக்கின்றது என்று அவ்வாறு சுயாதீனமாக இருக்கமுடியும் என்றால் காணாமல் போன உறவுகளை தேடுவதற்காக நீங்கள் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு என்ன நடந்திருக்கின்றது? காணாமல் போனோர் தொடர்பில் நீங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு எங்கே நீதி?என்றும் தெரிவித்த அவர்

எங்களை பொறுத்தவரையில் இந்த மாவீரர்கள் எதற்காக மாண்டார்களோ எங்கள் தேசியத்தலைவர் பேச்சுவார்த்தை மேசையில் எந்தக்கொள்கையினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினாரோ அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு இதனை நாங்கள் ஒருபொதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை 2009 ஆம் ஆண்டு தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம் இன்றுவரை நாங்கள் இரண்டு பாராளமன்ற தேர்தலினை எதிர்கொண்டுள்ளோம் அதிலும் படுதோல்வி அடைந்துள்ளோம்.

ஆனால் நாங்கள் பதவியினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக பதவியினை வைத்து கூட்டு சேர்வதற்கு ஓடவில்லை இன்றும் சொன்ன கொள்கையுடன் நிக்கின்றோம்

இதற்காக நாங்கள் நேர்மையாக இருப்போம் இந்த மண்ணில் சிந்தப்பட்ட இரத்தங்கள் தியாகங்கள் வீண்போகக்கூடாது அவ்வாறு என்றால் தமிழ்தேசம் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தீர்வு இந்த நாட்டிற்குள் அடையப்படவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு அதற்காக அர்பணிப்புடன் பாடுபடுவோம் இன்று இந்த மண்ணில் திட்டமிட்டரீதியில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் சில அரச அதிகாரிகள் உங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள் சமூகத்திலும் ஒருசிலரின் செயற்பாடு உங்களை அவமானப்படுத்திக்கொண்டிருக்கின்றது கவலைப்படாதீர்கள்

மகாபாரத்தினை பார்த்திருந்தால் பாண்டவர்கள் தரப்பில் ஜந்து பேரும் தாயும் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார்கள் என்று பார்த்தால் ஒருநாள் எங்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது உங்கள் பிள்ளைகளின் தியாகங்கள் ஒருபோதும் வீண்போகாது நாங்கள் உங்களுக்கு தலைவணக்குகின்றோம் நீங்கள் போற்றப்படவேண்டியவர்கள் ஒருநாள் எங்களின் தேசம் அங்கிகரிக்கப்படுகின்றபொழுது நீங்கள் இந்த தேசத்தில் அதியுயர்ந்த கௌரவத்திற்குரியவர்களாக நீங்களும் இருப்பீர்கள்  உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோன் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.