மகிந்தவை எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

மஹிந்த ராஜபக்ச ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்திற்கு வருவதை முதலில் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் பிரதமரால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப பணத்தை செலவு செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ரணில் மற்றும் மஹிந்த ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை மாத்திரமே அவர்களால் பயன்படுத்த முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இதனையடுத்து நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
#Mahinda #Anura Dissanayake #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.