ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடி!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து சர்ச்சைக்குரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.


பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடியினை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையிலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டிருந்த கூட்டம் ஒன்றின் போதும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நீக்கப்பட்ட கொடி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இவ்வாறான கொடிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். “சிறுபான்மையின மக்களை சித்தரிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடி மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொண்டிருந்த பேரணியில் இவ்வாறான கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக” அவர் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #sirisena #Flag 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.