அரசியல் நெருக்கடியில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் என்ன?

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன்,

சுமார் ஒன்றரை மணி நேரம் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கியுள்ளோம்.

அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது. நாட்டில் அரசாங்கம் இல்லை, பிரதமர் இல்லை. புதிய அரசியலமைப்பு திருத்த சட்டத்தினை உருவாக்கும் பணிகளுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் சட்டத்தை பேணுவது மிகவும் கடினமாகும். அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முற்படலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் தூதுவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Jaffna  #Sampanthan

No comments

Powered by Blogger.