புளியங்குளம் பிரதேச மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

வவுனியா வடக்கின் புளியங்குளம் பிரதேசக்கிராமங்களாகிய ராமனூர்,கல்மடு,பழையவாடி, புளியங்குளம், முத்துமாரிநகர், பரிசன்குளம்,புதூர் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாவீரர்களின் பெற்றோரை
மதிப்பளிக்கும் நிகழ்வை புளியங்குளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட மனிதாபிமானப்பிரிவும் பொருண்மிய மேம்பாட்டுப்பிரிவும் இணைந்து நிகழ்த்தியது.   நிகழ்வில் நினைவுச்சுடரினை மூன்று மாவீரர்களை இந்த    தேசத்துக்கு   தந்துதவிய   மாவீரர்களுடைய தயார் தனலட்சுமி அம்மா ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் அன்பே சிவம் அமைப்பினால் பயன்தரு பழமரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.


மேற்படி நிகழ்வில் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு. செல்வராஜா கஜேந்திரன், அன்பே சிவம் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு.குமணன், கிளிநொச்சி மாவட்ட முன்னணியின் செயலாளர் திரு.விமலாதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.விஜீகரன், அன்பே சிவம் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.மணிவண்ணன், முன்னணியின் வவுனியா மாவட்டப்பொருளாளர். திரு.கோ.கேசவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


#Tamilnews    #Tamil    #Srilanka    #Colombo    #Tamilarul.net    #Vavuniya   #TNPF

No comments

Powered by Blogger.