சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்

இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்த பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றது.
அத்துடன், ஜனநாயகத்தை மீறும் வகையில் ஜனாதிபதி குறித்த செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து இன்றைய தினம் இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் விளக்கமளிக்கவுள்ளார்.
இன்று மாலை நடைபெறவுள்ள குறித்த சந்திப்பில் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் தூதுவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.