கொழும்பில் விசா வழங்கும் நிலையத்திற்குள் நடந்த விபரீதம்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் விளையாட்டு துப்பாக்கியை காட்டி நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.கொள்ளுப்பிட்டியில் விசா அனுமதி பத்திரம் வழங்கும் நிலையத்தில் விளையாட்டு துப்பாக்கியை காட்டி 55000 ரூபாவை கொள்ளையடித்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, நுட்பமான முறையில் சந்தேக நபரை கைது செய்துள்ளார்.
அந்த நிலையத்தின் பணம் அறவிட்டாளர் பம்பலப்பிட்டி பிரதான அலுவலகத்திற்கு பணம் கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளார்.
அதற்காக தயார் செய்யப்பட்ட பண பார்சலை குறித்த சந்தேக நபர் கொள்ளையடித்துள்ளார். எனினும் இறுதியில் அவர் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net #Visa
.jpeg
)





கருத்துகள் இல்லை