நீதியை தடுக்க முயன்றால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்-அகிம்சா விக்கிரமதுங்க

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை
ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார்.லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்,உங்கள் முப்படைகளின் பிரதானியை பாதுகாப்பதற்காகவோ அல்லது வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை  பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் சிறிசேனவிற்கு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Lasantha Vikiramathunga #Agimsha  Vikiramathunga #Sirisena  #Letter

No comments

Powered by Blogger.