பிரபல நடிகர் பகத் பாசிலுடன் ஜோடி சேரும் சாய்பல்லவி

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்


மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் மலையாளத்தில் பகத் பாசில் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். விவேக் இயக்கும் இந்தப்படம் ரொமான்டிக், திரில்லர் கதையில் உருவாக உள்ளது. சாய்பல்லவிக்கு தமிழில் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.