முதல்வரை மிரட்டும் மழை!


"அடைமழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஒருபக்கம் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் எல்லோரும் இருக்க... சென்னையும் ஒருபக்கம் தவித்தபடி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி
பழனிசாமி என்ன செய்வதெனப் புரியாமல் சற்றுக் குழப்பத்தில் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது. இன்று தலைமைச் செயலாளர் உட்பட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சிலரையும் அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர்.

'பேரிடர் நிவாரண நடவடிக்கையில் நாம சரியாக செயல்படவில்லை என்ற பேரு மக்கள் மத்தியில் வந்துடுச்சு. அதை சரி பண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம இருக்கோம். டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல. அதுக்குள் சென்னையில் மழை ஆரம்பிச்சிருச்சி. மழை தொடரும்னு வானிலை மையத்துலேர்ந்து சொல்லிக்கிட்டிருக்காங்க. இங்கே என்ன பிரச்சினை வரும்னு தெரியல. அதிகாரிகள் எல்லோரையும் அலார்ட் பண்ணனும். மாநகராட்சி ஊழியர்களைத் தயார் நிலையில் வெச்சிருக்கணும்.

அமைச்சர் சொன்னால்தான், அமைச்சர் வந்தால்தான் வேலை செய்வோம்னு அதிகாரிகள் முடங்கிடக் கூடாது. அதிகாரிகள் அலார்ட்டாக இல்லைன்னா ஊழியர்கள் வேலை செய்ய மாட்டாங்க. அதனால் அதிகாரிகள்தான் இந்த நேரத்தில் முன்னெச்சரிக்கையா இருக்கணும். அமைச்சர்கள் ஊரில் இல்லைன்னு அதிகாரிகள் ஜாலியா இருக்கப் போறாங்க... நான் எந்த நேரத்தில் வேணும்னாலும் வெளியே கிளம்புவேன். சென்னையில் மழையால் பிரச்னை என மக்கள் யாரும் ரோட்டுக்கு வந்துடக் கூடாது. அப்படி எங்காவது மக்கள் மறியல்ன்னு என் கவனத்துக்கு வந்தால் அந்த பகுதியில் இருக்கும் அதிகாரிகள் மீது விசாரணையே இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லிடுங்க. இதுல நான் தயவு தாட்சண்யம் பார்க்கவே மாட்டேன்.

இந்த மழை பிரச்சினை முடியும் வரை யாருக்கும் லீவும் கொடுக்க வேண்டாம். லீவும் எடுக்க வேண்டாம். உடம்பு சரியில்லைன்னு யாராவது பொய்யா காரணம் சொல்லிட்டு மெடிக்கல் லீவு எடுத்தால் அவங்க மேலயும் நடவடிக்கை எடுங்க. எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி மூடி மறைக்காதீங்க. உடனுக்குடன் என்னோட கவனத்துக்கு கொண்டு வாங்க...’ என்று முதல்வர் கோபத்துடனே சொன்னதாகச் சொல்கிறார்கள்.

முதல்வர் இன்று சொன்ன விஷயங்களை அப்படியே அதிகாரிகளின் கவனத்துக்கும் சர்க்குலர் அனுப்பாத குறையாகக் கொண்டுபோயிருக்கிறார்கள். மாநகராட்சி, சுகாதாரத் துறை என அத்தனை துறை அதிகாரிகளும் சற்று பயத்துடன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“முதல்வர் பேசுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனால் நடவடிக்கை எதுவும் சரியாக இல்லையே... அதானே இப்போ டெல்டா மாவட்டங்களில் பிரச்னையாக மாறிட்டு இருக்கு...” என்று கமெண்ட் போட்டது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றுக்கும் போஸ்ட் கொடுத்துவிட்டு, சைன் அவுட் ஆனது.

“ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நாங்க எங்க உழைப்பை மட்டும்தான் போட முடியும். செலவையும் எங்களையே பார்க்கச் சொன்னால் எங்கே போறது. பத்து ரூபாய் வருமானத்துக்கு வழி இல்லை. அப்புறம் எங்கே செலவு பண்றது’ என்ற புலம்பல் ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் அதிகமாக கேட்க ஆரம்பித்திருக்கிறது
#india 

No comments

Powered by Blogger.