சுனைனா: அடுத்த சீரிஸ்!

நடிகை சுனைனா நடிப்பில் வெளியான ‘நிலா நிலா ஓடிவா’ வெப் சீரியஸ் தொடர்ந்து அடுத்து நடிக்கவுள்ள வெப் சீரியஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனாவுக்கு வரவேற்பு பெற்றுத்தந்தது வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள் தான். இதனையடுத்து சமர், தொண்டன் போன்ற படங்களில் நடித்தார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சுனைனா கடைசியாக நடித்தப் படம் காளி.

திரைப்படங்களிலிருந்து வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள சுனைனாவுக்கு, ஹாரர் த்ரில்லரில் உருவான ‘நிலா நிலா ஓடிவா’ என்ற வெப் சீரிஸ் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதனை ‘திரு திரு துறு துறு’ படத்தின் இயக்குநர் ஜே.எஸ். நந்தினி இயக்கியிருந்தார்.

இதனையடுத்து தற்போது மற்றுமொரு புதிய தெலுங்கு வெப் சீரிஸில் நடிக்க சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். ‘High Priestess' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரியஸ் புஷ்பா என்ற பெண் இயக்குநர் இயக்கவுள்ளார்.
‘ஜீ5’ என்ற இணையத்தில் வெளியாகும் இதில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். கடந்த 2012ஆம் ஆண்டு ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’ மற்றும் 2014ஆம் ஆண்டில் ‘மனம்’ போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அமலா, தற்போது இந்த வெப்சீரிஸ் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார்.


No comments

Powered by Blogger.