அநுராதபுரம் மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்!

அனுராதபுரம் மாநகர சபையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் மூன்று பேர் அடங்கிய குழுவினருக்கு இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


பிரதான சந்தேக நபரான பெண், அவரின் கணவரான (வருமானவரி பரிசோதகர்) மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரை பிணையில் விடுதலை செய்யும்படி சமர்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்தே குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அநுராதபுரம் மாநகர சபை சம்பள பிரிவின் பொறுப்பதிகாரியாக தகுதி பெற்ற ஒருவர் செயலாற்றி வந்துள்ளதுடன் சபையின் சம்பள தயாரிப்பு பிரிவில் மேலதிக ஊழியர் ஒருவர் செயற்பட்டு வந்துள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவின் வாணிக விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலிடப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபரான பெண் ஊழியர் தனது பிள்ளைகள் இருவரினதும் வங்கிக் கணக்கில் நகர சபையின் பல இலட்சம் ரூபா பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Anuradhapura

No comments

Powered by Blogger.