நாடாளுமன்ற சம்பிரதாயங்களை சபாநாயகர் மீறிச் செயற்படுவதாக மஹிந்த அணி சாடல்!

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை எட்டி உதைத்து சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பான முறையில் நடந்து கொள்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) சபாநாயகரால் விடுக்கப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே சபை முதல்வரும், அமைச்சருமான தினேஸ் குணவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் ஒன்று இல்லையென சபாநாயகரால் கூறமுடியாது.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுவிட்டதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு மீளப்பெறப்படவேண்டும். தெரிவுக்குழு குறித்தான சபாநாயகரின் அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் சபைபோலவே நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு சபாநாயகர் முற்படுகின்றார். என்று சபை உரிய வகையில் பக்கச்சார்பின்றி இயங்குமோ அதுவரை சபை அமர்வில் கலந்துகொள்வதில் பயன் இல்லை“ என தெரிவித்துள்ளார்.

#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net #Mahinda #UNP #Dinesh-Gunaward

No comments

Powered by Blogger.