கேப்பாபிலவு மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி!

தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மாவீரர் துயிலுமில்லங்கள், இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள துயிலுமில்லங்களின் முன்பாக மற்றும் பொது இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


இதற்கான ஏற்பாடுகளை மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகள் என்பன முன்னெடுத்து வருகின்றன.

இந்தநிலையில் கேப்பாபிலவு மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் மாவீரர் நாள்நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் படையினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளதால் அதன்முன்பாக உள்ள காணியொன்றில் நினைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய காணி துப்பரவு செய்யப்பட்டு காணியிலும், வீதிகளிலும் மஞ்சள் சிவப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டும் நிகழ்வுக்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net#Keppapilavu

No comments

Powered by Blogger.