யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி புனரமைப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மறுபுறம் பல்கலைக்கழக சூழலெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.இலங்கை காவல்துறை மீண்டும் ஆயுதங்கள் சகிதம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தாண்டி பொதுமக்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் மரநடுகை ,நினைவேந்தல் முன்னேற்பாடு என மிகவும் மும்முரமாக உள்ளனர்.

இதனிடையே கோப்பாயில் தமிழீழ தேசிய மாவீரர் நாளிற்கு தடை கோரப்பட்டுள்ள போதும் அதனை பொருட்படுத்தாது அனைத்து ஏற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments

Powered by Blogger.