முறிகண்டி ஆலய அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலய வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கோவில் அமைந்துள்ள பகுதியிலுள்ள கடைகளை பொருத்தமான இடத்திற்கு மாற்றுதல், வளாகத்தினை அபிவிருத்தி செய்தல், போக்குவரத்து வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கோவில் அபிவிருத்தி தொடர்பில் பல கோரிக்கைகள் முனன்வைக்கப்பட்டதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேற்படி கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினர், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Powered by Blogger.