மஹிந்தவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் – மங்கள

மஹிந்தவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள்.

நாட்டின் பிரதமராக மஹிந்த கடமைகளைப் பொறுப்பேற்றால் அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வாழவேண்டி ஏற்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.