தமிழக வாழ்வுரிமைக் கட்சி 27ஆம் தேதி மாவீரர் தினப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி!

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”வரும் 27ஆம் தேதி தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே மாவீரர் தின பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி கடந்த 11ஆம் தேதி காவல் துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு 16ஆம் தேதி காவல் துறையினரால் நிராகரிக்கப்பட்டது. எனவே, இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் காந்திகுமார் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் வரும் 27ஆம் தேதி மாவீரர் தினப் பொதுக்கூட்டத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Powered by Blogger.