படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரும் பதில் முதல்வருமான க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் உண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த ஊடகவியலாளர்களை வரலாற்றில் என்றும் மறக்க கூடாது என்பதற்காகவும் இந்த நினைவுத்தூபி அமைக்கும் பணியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்டு வருவதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.