ஊடகங்களை மிரட்டி ஊடகவியலாளர்களை புகைப்படமெடுத்த பொலிசார்

வல்வெட்டிதுறையில் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாட வந்தவர்களையெல்லாம் புகைப்படமெடுத்து கொண்டாடியுள்ளார் வல்வெட்டித்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரி சேனரட்ண.


தலைவரது இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வுகளின் போது, வல்வெட்டித்துறை காவல்; நிலையத்தின் பொறுப்பதிகாரி தங்களைப்படமெடுக்க வேண்டாமென கூறி ஊடகங்களை மிரட்டிக்கொண்டிருந்தார்.ஆனால் அவரோ ஊடகவியலாளர்களை அடையாளப்படுத்தி புகைப்படமெடுத்துக்கொண்டார்.

அனுராதபுரத்தை சேர்ந்த சிங்கள இனவாதியான   வல்வெட்டித்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரி சேனரட்ண கோத்தபாயவின் தீவிர விசுவாசியாவார்.இதனிடையே தன்னை தமிழ் தேசிய நாளிதழென சொல்லிக்கொள்ளும் உதயன் நாளிதழது செய்தியாளரான நபரொருவர் அங்கேயே பாய் போட்டு படுத்திருந்து மாவீரர் தினம் உள்ளிட்டவற்றினை உளவு சொல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் குற்றச்சாட்டுக்களினை இன்று முன்வைத்துள்ளனர்.
Powered by Blogger.