கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஏற்ப்பாப்டாளர்கள் அழைப்பு

மாவீரர் தினத்தினை உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்க எவ்வித தயக்கமும் இன்றி வருகை தருமாறு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாவீரர் நாள் ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போதே அக்குழு இவ்வழைப்பினை விடுத்துள்ளது.
மேலும் இவ்வருடம் மாவீரர் நாளை கடைப்பிடிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லையென குறிப்பிட்டு வெளியிடப்பட்ட செய்தியின் பின்னர், எவ்வித அழுத்தங்களோ, அச்சுறுத்தல்களோ எமக்கு எவராலும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் நாம் மாவீர்ர் தினத்தை நினைவு கூருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதேவேளை மாவீரர் துயிலுமில்லமத்தை சுற்றி மதில் அமைப்பதற்கு புலம்பெயர் நாட்டிலிருந்து உதவி கிடைத்துள்ளது. அவ்வுதவி தொகையின் ஊடாக மதில் அமைக்கப்பட்டு வருவதுடன் வடக்கு கிழக்கில் 35க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றது அவற்றையும் புனரமைப்பு செய்ய உதவுமாறும் அக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.