சட்ட விரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மினுவாங்கொட, கமன்கெதர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.