தமிழீழத் தேசிய மாவீரர் நாள்-நியூசிலாந்து

 இன்று 27/11/2018 தமிழ் தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் 13 May Road Mount Roskill (War Memorial Hall) இல் மாலை 6.30 மணியளவில் பெருந்திரளான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் முன்னிலையில் மிக எழுச்சியாக ஆரம்பமானது.

இன் நிகழ்வுக்கு நியூசிலாந்து தமிழ்ச்சங்கம், பல்வேறுபட்ட மனிதநேய தொண்டார்வ நிறுவனங்கள், மற்றும் தமிழகத்தை சார்ந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.


நிகழ்வின் முதல்கட்டமாக தமிழர் ஒருங்கிணைப்ப்பு குழுவினர் மற்றும் தமிழர் இளையோர் அமைப்ப்பினர்களின் அணிவகுப்புடன் ஆரம்பமானது.


பொதுச்சுடரானது மாவீரர் மேஜர் கிங்ஸ்லி அவர்களின் சகோதரன் வவி அவர்களால் ஏற்றப்பட்டது.
நியூசிலாந்து தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது.


தமிழீழ தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்ப்பு குழுவின் பெண்கள் எழுச்சிப்பிரிவின் பொறுப்பாளர் சுமதி அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழ கொடியேற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி ஒலிபரப்பப்பட்டது.
பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஈகைச்சுடரனது மாவீரர் வீரவேங்கை ஆர்தினி அவர்களின் தயார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, தமிழீழ மற்றும் தமிழக மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதை வேர்களாகிய மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நியூஸிலாந்திலே இருக்கக்கூடிய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாதிரி கல்லறை சுமார் முப்பத்தைந்து அமைக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் சகோதரர்களினால் உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.


தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவம் தாங்கிய புகைப்படத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தாய்த்தமிழீழ பாடலுக்கு சாருஜா சர்வேஸ்வரன் அவர்களின் நடனம் இடம்பெற்றது.
அடுத்து தருண் நாதன் அவர்களின் தமிழீழ எழுச்சி கவிதை உரைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த அமல் அவர்களினால் சிறப்புரை வழங்கப்பட்டது.
பின்னர் விஷனா அவர்களினால் எழுச்சி நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து கஜா அவர்களினால் எம் மண்ணின் மாவீரருக்கு பாடல் படிக்கப்பட்டது.
பின்னர் அனனியா ரவிச்சந்தர் அவர்களால் கவிதை உணர்வு பூர்வமாக உரைக்கப்பட்டது.

தமிழர் இளையோர் அமைப்ப்பினர்களின் சார்பாக அவ் அமைப்பின் செயலாளர் லக்சன் அவர்களின் தமிழீழ வரலாறு பற்றிய உரை இடம்பெற்றது.

பின்னர் சாருஜன் சர்வேஸ்வரன் அவர்களின் கவிதை இடம்பெற்றது.

பின்னர் நிகழ்வின் இறுதியாக தமிழர் இளையோர் அமைப்ப்பினர்களின் சார்பாக அவ் அமைப்பின் தலைவரான ருக்சன் நியூசிலாந்து தேசிய கொடியினை இறக்கிவைத்தார். தமிழர் ஒருங்கிணைப்ப்பு குழுவினர் சார்பாக அவ் அமைப்பின் தலைவரான தாயகரன் தமிழீழ தேசியக்கொடியினை இறக்கி வைத்தார்.

இத்துடன் தமிழர்களின் புனிதனாளாம் தமிழீழ மாவீரர் நாளானது 350ற்கும் அதிகமான நியூசிலாந்தில் வாழும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் சாட்சியாக தமிழ்த் தேசியம் நோக்கிய பாதையில் ஒரு படிக்கட்டென இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.