கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

மாவீரர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  இரத்த தானமும் நடைபெற்றது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
இதனையொட்டி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.