வவுனியாவில் மாபெரும் தொழில் சந்தை!

வவுனியா – குருமன்காடு  கலைமகள் மைதானத்தில், தேசிய இளைஞர் சேவை
மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் ,வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய  மாபெரும் தொழில் சந்தை இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை)காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணிவரை இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவி பணிப்பாளர் சிசிர செனவிரட்ணவின்  தலைமையில் நடைபெற்றது.
இந்த  நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனிபா கலந்து கொண்டதோடு  சிறப்பு அதிதிகளாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரேஷ்குமார்,  வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஜானக, மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்வின் ஒழுங்கமைப்பு பணிகளை வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா தெற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன,  இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.