த.ம.முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

தேசத்தலைவனின் அகவை நாளையொட்டி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் புதிய கொலனி மாங்குளம் பகுதியில் வைத்து இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் செயற்பாட்டாளர் திரு.பிறேம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னணியின் முல்லைமாவட்டச்செயலாளர் திரு.கிந்துஜன், மாங்குளம் பிரிவுச்செயற்பாட்டாளர் திரு.சுரேஸ், வவுனியா சிதம்பரபுரம் செயற்பாட்டாளர் திரு.சுரேஸ், தோணிக்கல் செயற்பாட்டாளர் திரு.விக்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேற்படி துவிச்சக்கர வண்டிக்கான உதவிகளை கனேடிய பேரவையின் மண்வாசனை அமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.