மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில்.!

யாழ் பல்கலைக்கழகத்தில்  இன்று மதியம் 12.30 மணியளவில்  மாவீரர்களுக்கு  மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு   மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்றது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ  மாவீரர் நினைவிடத்தை மையப்படுத்தி மாவீரர் நினைவு வளாகம் அமைக்கப்பட்டு, வளைவுகள் கட்டப்பட்டு மாவீரர் புனிதப் பிரதேசம் போன்று ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். குறித்த நிகழவில் . மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்த உறவுகள் பூக்கள் மற்றும் பூமாலை கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்

No comments

Powered by Blogger.