கோப்பாயில் மாவீரர் நினைவேந்தலில் பொலிசார் குவிப்பு

மாவீரர் நினைவுதினத்தை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவஞ்சலி இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் துயிலுமில்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நினைவுதினத்தை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்த உறவினர்கள், பொலிஸாரின் அனுமதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவஞ்சலி நிகழ்வை நடத்தியுள்ளனர்.
வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தனது இரண்டு புதல்வர்களை அர்ப்பணித்தவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான பாலேந்திரன் ஜெயக்குமாரி பொதுச்சுடர் ஏற்றினார். ஏனையோர் அகவணக்கம் செலுத்தி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுதினம் நிறைவடையும்வரை, பெருமளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குழுமியிருந்ததோடு, இராணுவ வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன
Powered by Blogger.