வவுனியாவில் மாவீரர் நிகழ்வு நடத்துவதற்கு துளசிக்குத் தடை

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் மாவீரர் நிகழ்வு நடத்துவதற்கு ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசிக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நீதிமன்றத்தினால் தடை உத்தரவிடப்பட்ட கடிதம் நேற்றைய (26.11.2018) திகதியிடப்பட்டு  பொலிஸாரிடம்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மிவைத்தான் ஈச்சங்குளம் பகுதியிலுள்ள 611 ஆவது இராணுவ தலைமையகத்திற்கு முன்னாலோ அல்லது அருகிலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களின் மாவீரர் நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களிலோ அல்லது தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தின் கொடிகள், பாடல்கள், உடைகள் அணிவதற்கு கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட கொடிகள், பதாதைகள், படங்கள், உடைகள் அணியக்கூடாது
மற்றும் பாடல்கள் இசைக்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டளைகளிடப்பட்ட கடிதம் ஒன்றினை பொலிசார் தனக்கு வழங்கியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.