கோப்பாய் நினைவேந்தலில்தமிழீழ வரைபடம் ஆடையுடன் நுளைந்த இராணுவ புலனாய்வாளன்.

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நினைவிடத்திற்குள் புலிக்கொடி மற்றும் தமிழீழ வரைபடம் பொறித்த ஆடை என்பவற்றுடன் உள்நுளைந்த இராணுவப் புலனாய்வாளர் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் விரட்டப்பட்டுள்ளார்.

கோப்பாய் மாவீரர் நாள் தடை செய்யவேண்டும் எனக்கோரி கோப்பாய் பொலிசார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் நினைவேந்தலின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் தமிழீழ வரைபடம் உள்ளிட்டவை பயன்படுத்த யாழ் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகலே நினைவேந்தல் நடைபெறும் இடத்திற்கு முன்பாக பொலிசாரும் நினைவேந்தல் அமைவிடத்திற்குள் இராணுப் புலனாய்வாளர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது திடீரென மாலை 05 மணியளவில் நினைவேந்தல் நடைபெறும் இடத்திற்குள் உள்நுளைந்த இராணுவப் புலனாய்வளர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தானது பையினுள் கொண்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடையினை எடுத்து அதனை அணிய முற்பட்டுள்ளார்.
இதன்போது நிலமையை உணர்ந்து சுதாகரித்துக்கொண்ட நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அவரருகில் ஓடிச்சென்று அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதன்போது அவரது பையினுள் விடுதலைப் புலிகளின் புலிகொடியும் இருந்ததாக்க கூறப்படுகின்றது.
மாவீரந் நாள் நினைவேந்தலின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் தமிழீழ வரைபடம் உள்ளிட்டவை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தலை குழப்புவதற்காக இராணுவ புலனாய்வாளர்களால் அரங்கேற்றப்படவிருந்த நாடகம் முறியடிக்கப்பட்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.