தாஜுதீன் படுகொலை சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படக்கூடிய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார்.

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News #vaseem  #thagithen

No comments

Powered by Blogger.