வைகோ வை பழிவாங்கும் மு.க.ஸ்டாலின்

‘தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க.ஸ்டாலின்
தெளிவுபடுத்த வேண்டும்’ என்று வைகோ கெஞ்சி கேட்டுக்கொண்டபோதும், அதை தெளிவுபடுத்த ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
"ம.தி.மு.க தோழமை கட்சிதான் கூட்டணி கட்சி இல்லை" என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தி.மு.க. தோழமை கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதற்கிடையே ‘தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக கேட்டுக்கொண்டார். 
இந்த சூழ்நிலையில் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைகோ நேற்று சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பை நிறைவு செய்துவிட்டு வெளியே வந்த வைகோ 'நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற நான் பாடுபடுவேன்' என்று சத்தியம் செய்தார். 
எனினும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் கூறுவதை தவிர்த்து விட்டார். 
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் நேற்று நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோதும்,  "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் என்னை வந்து சந்தித்தார்கள். வைகோ நடத்திய மாநாட்டில் எங்கள் பொருளாளர் நேரில் சென்று கலந்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்போகும் மாநாட்டுக்கு வருவதாக சொல்லி இருக்கிறேன்." என்று மட்டும் பதில் கூறி சென்று விட்டார். 
 ‘தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று வைகோ கெஞ்சி கேட்டுக்கொண்டபோதும், அதை தெளிவுபடுத்த ஸ்டாலின் தயாராக இல்லை. சென்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்கள் நலக்  கூட்டணி அமைத்து தங்கள் வெற்றியை தடுத்த வைகோ வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.