அரசியல் குழப்பத்தை விரைவில் தீர்க்கவும் – ஐ.நா

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பத்தை விரைவில் தீர்த்துக்கொள்வது அவசியமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் (hanaa Singer) அம்மையார் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.

இவற்றை செவிமடுத்த ஐ.நா. பிரதிநிதி, அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை தீர்த்து அபிவிருத்தியின்பால் கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாரென்றும் குறிப்பிட்டார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.