முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு!

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பிலேயே அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
Powered by Blogger.