இந்தோனேசியா Lion Air விமானத்தின் இரண்டாம் தகவல் பதிவு பெட்டியைத் தேடல்!

விபத்துக்குள்ளான Lion Air விமானத்தின் இரண்டாம் தகவல் பதிவு பெட்டியைக் கடலிலிருந்து மீட்க இந்தோனேசிய முக்குளிப்பாளர்களின் தேடல் தொடர்கிறது.


ஏற்கனவே ஒரு தகவல் பதிவு பெட்டி நேற்று காலை ஜாவா கடலில் மீட்கப்பட்டது.

ஆனால், அது சேதமடைந்த நிலையில் இருந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாம் தகவல் பதிவு பெட்டியை இந்தோனேசிய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இரண்டாம் பதிவு பெட்டியிலிருந்து சமிக்ஞை ஒலிகள் வருவதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவிலிருந்து பங்கால் பினாங் நகரத்திற்குப் புறப்பட்ட விமானம், 13 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. 
Powered by Blogger.