வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் பதில்!

சண்டக்கோழி 2 படத்தின் வெற்றிச் சந்திப்பில் திருமணம் குறித்தும் வரலட்சுமி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பிடிகொடுக்காமல் மையமாகப் பதிலளித்திருக்கிறார் விஷால்.


லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சண்டக்கோழி 2. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழைவிடத் தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வெற்றி சந்திப்பு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் விஷால் கலந்துகொண்டார். அப்போது ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் விஷால். அப்போது, ‘வரலட்சுமியுடன்தான் திருமணமா? எப்போது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன்” என்று விஷால் பதிலளித்தார்.

மேலும் இது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் ஷேர் செய்துகொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை. விஷாலுக்கு, திருமணத்திற்குப் பெண் பார்த்தால், நானே பெண் பார்த்துத் திருமணம் செய்து வைக்கத் தயார். அவர் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்துப் பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றார்.

No comments

Powered by Blogger.